ADDED : ஏப் 01, 2025 01:39 AM
காவிரி ஆற்றில்மிதந்த பெண் சடலம்
இடைப்பாடி:இடைப்பாடி அருகே, கல்வடங்கம் காவிரி ஆற்றில் மிதந்து வந்த பெண் சடலத்தை மீட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இடைப்பாடி அருகே, கல்வடங்கம் காவிரி ஆறு புனித தீர்த்தத்தலமாக விளங்குவதால், தினமும் இங்கு பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் தீர்த்தம் எடுத்து செல்லுதல் மற்றும் பரிகார பூஜை, திதி கொடுத்தல், ஈமச்சடங்கு செய்தல் என பல்வேறு காரியங்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கல்வடங்கம் காவிரி ஆற்றில், நேற்று ஒரு பெண் சடலம் மிதந்து வெளியே தெரிந்தது.இதையடுத்து, கோனேரிபட்டி அக்ரஹாரம் வி.ஏ.ஓ., தமிழ்முருகன் கொடுத்த புகார்படி, தேவூர் போலீசார் காவிரி ஆற்றில் மிதந்த அடையாளம் தெரியாத பெண் சடலத்தை மீட்டனர்.
பின், பிரேத பரிசோதனைக்காக இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

