ADDED : ஏப் 03, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கழுதை பால் விற்பனை ஜோர்
அரூர்:அரூரிலுள்ள திரு.வி.க., நகர், கோவிந்தசாமி நகர், நான்குரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக, கழுதைப்பால் விற்பனை நடக்கிறது. கழுதைப்பால் கொடுப்பது, குழந்தைகளுக்கு நல்லது என, விற்பனை செய்வோர் கூறுவதால், ஆர்வத்துடன் மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து, கழுதை பால் விற்ற விருதாசலத்தை சேர்ந்த முத்து, 37, கூறுகையில், ''விருதாசலத்தில் இருந்து, 5 பேர், 5 கழுதைகள் மற்றும் குட்டிகளுடன் வந்துள்ளோம். கடந்த, 4 நாட்களாக, அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் ஒரு சங்கு, கழுதை பால், 100 ரூபாய் என விற்பனை செய்கிறோம். கழுதை பாலை குடிப்பதால் இருமல், சளித்தொல்லை நீங்கி, ஜீரணம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக கூறி, மக்கள் வாங்கிச் செல்கின்றனர்,'' என்றார்.

