ADDED : ஏப் 03, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஸ் ஸ்டாண்டில் ஆண் சடலம்
பாப்பிரெட்டிப்பட்டி:--கடத்துார் பஸ் ஸ்டாண்டில் உள்ள நிழற்கூடத்தில், 40 வயது மதிக்கத்தக்க நபர், நேற்று முன்தினம் படுத்து உறங்கி கொண்டிருந்தார். நேற்று காலை அவரை எழுப்பியபோது இறந்து கிடந்தார். புகார் படி, கடத்துார் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் இறந்தவர், வேலுார் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த வேலு மகன் குணசேகரன், 40 என்பதும், அடிக்கடி வீட்டிலிருந்து வெளியேறி ஊர் சுற்றிதிரிந்தவர் என்பதும் தெரிந்தது.

