/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தி.மு.க., தண்ணீர் பந்தல் திறப்பு
/
தி.மு.க., தண்ணீர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 03, 2025 01:57 AM
தி.மு.க., தண்ணீர் பந்தல் திறப்பு
பாலக்கோடு:பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில், தி.மு.க., சார்பில், தண்ணீர் பந்தல் திறப்பு விழா, பாலக்கோடு பேரூராட்சி சேர்மன் முரளி தலைமையில் நேற்று நடந்தது. இதில், மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், வக்கீல் கோபால், ஒன்றிய துணை செயலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி மாவட்டத்தில், பொதுமக்களின் தாகம் தீர்க்க, தி.மு.க., சார்பில், ஆங்காங்கே தண்ணீர் பந்தல் திறக்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியதை தொடர்ந்து, பாலக்கோடு பஸ் ஸ்டாண்டில், தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர், பழனியப்பன் நேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.