/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மத்துார் வணிகர் சங்கத்தின்நிர்வாகிகள் பதவியேற்பு
/
மத்துார் வணிகர் சங்கத்தின்நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : ஏப் 03, 2025 02:01 AM
மத்துார் வணிகர் சங்கத்தின்நிர்வாகிகள் பதவியேற்பு
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துாரில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி, தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட தலைவர் ஓம்சாந்தி சங்கர், செயலாளர் நாராயணமூர்த்தி, பொருளாளர் குமரவேல், மாநில துணைத் தலைவர் லாரன்ஸ், மாநில துணை செயலாளர் சின்னப்பன், மாவட்ட கவுரவ தலைவர் மாதன் முன்னிலையில், மத்துார் வணிகர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சரவணன், செயலாளர் திருப்பதி, பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில், மத்துார் வணிகர் சங்கத்தை சேர்ந்த, இளைஞர் அணியினர், செயற்குழு உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட, 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

