/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு விருது
/
கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு விருது
ADDED : ஏப் 09, 2025 01:26 AM
கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு விருது
தர்மபுரி:கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கப்பட்ட விருதுகளை பெற்றுக்கொண்ட, தர்மபுரி, குண்டலப்பட்டி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மைய தலைவர் கண்ணதாசன் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழ கத்தின் விரிவாக்க கல்வித்துறையில், தர்மபுரி, குண்டலப்பட்டியில் இயங்கும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கால்நடை உற்பத்தி மற்றும் கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகளின் மேம்பாட்டிற்கான ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை கால்நடை மருத்துவ கல்லுாரியில், ஏப்., 4ல் புதுடில்லி வேளாண் அறிவியல் தமிழ் இயக்ககத்தால் நடத்தப்பட்ட, 10-வது நாடளாவிய வேளாண் அறிவியல் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில், மையம் தமிழில் வெளியிட்ட பொது கட்டுரைகளை, அங்கீகரித்து பாராட்டி, மையத்திற்கு சிறந்த பொதுக்
கட்டுரை விருது வழங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வகுமார் இவ்விருதை வழங்கினார்.
மேலும், மையத்தால் சமர்ப்பிக்கப்பட்ட, 'கறவைமாடு வளர்க்கும் விவசாயிகளின் பயிற்சி தேவை மதிப்பீட்டின் அடிப்படையில் பயிற்சி அளித்தல்' என்ற தலைப்பிலான தமிழ்வழி ஆராய்ச்சி கட்டுரைக்கு, கால்நடை சமூக அறிவியலில் சிறந்த கட்டுரைக்கான விருதும் வழங்கப்பட்டது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.