/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மேம்பாலத்தில் விபத்தை தடுக்கமக்கள் வலியுறுத்தல்
/
மேம்பாலத்தில் விபத்தை தடுக்கமக்கள் வலியுறுத்தல்
ADDED : ஏப் 10, 2025 01:50 AM
மேம்பாலத்தில் விபத்தை தடுக்கமக்கள் வலியுறுத்தல்
மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம், மொரப்பூரில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இதன் வழியாக, தர்மபுரி, அரூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை ஆகிய பகுதிகளுக்கு தினமும், பஸ், லாரி உள்ளிட்ட, ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், ரயில்வே மேம்பாலத்தில், தர்மபுரி - கிருஷ்ணகிரி மற்றும் அரூர் சாலைகளில் இருந்து, வரும் வாகனங்கள் ஒன்று சேரும் இடத்தில், அடிக்கடி விபத்து ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காயமடைந்து வருகின்றனர். மேலும், சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே, விபத்தை தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுப்பதுடன், மேம்பாலத்தில் பழுதான மின்விளக்குகளை சீரமைக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

