/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோபசந்திரம் வெங்கடேஸ்வரசுவாமி கோவில் தேரோட்டம்
/
கோபசந்திரம் வெங்கடேஸ்வரசுவாமி கோவில் தேரோட்டம்
ADDED : ஏப் 11, 2025 01:37 AM
கோபசந்திரம் வெங்கடேஸ்வரசுவாமி கோவில் தேரோட்டம்
ஓசூர்:தட்சிண திருப்பதி என அழைக்கப்படும், கோபசந்திரம் வெங்கடேஸ்வர சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கோபசந்திரத்தில், 600 ஆண்டு பழமையான வெங்கடேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. தட்சிண திருப்பதி என அழைக்கப்படும் இக்கோவிலின் தேரோட்ட திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி கோவிலில் சிறப்பு யாகம், பூஜை, அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடந்தது.
இதில் சூளகிரி, ஓசூர், கோபசந்திரம், காமன்தொட்டி, உத்தனப்பள்ளி மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள், 'கோவிந்தா, கோவிந்தா' என பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவை, கோவில் கமிட்டி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

