/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'மாநில முதல்வர் வேந்தராக செயல்படுவார்'
/
'மாநில முதல்வர் வேந்தராக செயல்படுவார்'
ADDED : ஏப் 11, 2025 01:39 AM
'மாநில முதல்வர் வேந்தராக செயல்படுவார்'
தர்மபுரி:தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக முதல்வர், தன் சட்ட போராட்டதால், 10 மசோதாக்களில், தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதா பெயரை வைக்கும் மசோதாவும் ஒன்று. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அந்த மசோதாவையும் பாதுகாத்து, கட்சி எல்லைகளை கடந்து, உண்மையான தலைவர் என நிரூபித்திருக்கிறார். சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் உரிமையை கருணாநிதி பெற்றுக் கொடுத்ததை போல, கவர்னர்களின் அடாவடிக்கு, கடிவாளம் போட்டு மற்றுமொரு மாநில சுயாட்சி அதிகாரத்தை, இந்திய மாநிலங்களுக்கு ஸ்டாலின் பெற்று தந்திருக்கிறார். 10 மசோதாக்களும் நடைமுறைக்கு வந்ததால், மாநில முதல்வர் வேந்தராக செயல்படுவார் என்ற நிலை உருவாகியுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.

