/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஒத்திகை
/
தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு ஒத்திகை
ADDED : ஏப் 18, 2025 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு:தீ தொண்டு வாரத்தையொட்டி, பாலக்கோடு அருகே, ஆராதள்ளி பிரிவு சாலையில் உள்ள, தனியார் காய்கறி பதப்படுத்தும் தொழிற்சாலை பணியாளர்களுக்கு தீ தடுப்பு குறித்த ஒத்திகை நேற்று நடந்தது.
இதில், பாலக்கோடு தீயணைப்பு மீட்பு பணி நிலைய சிறப்பு நிலைய அலுவலர் தெய்வம் மற்றும் குழுவினர், அவசர காலங்களின் போது, தீயணைப்பான்களை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் தீ விபத்துகளின் போது, எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து, ஒத்திகை செய்து காண்பித்தனர்.