/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை
/
தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை
ADDED : ஜூன் 11, 2025 02:22 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்த தொப்பையாறு அணைக்கட்டில், தீயணைப்பு துறையினர், பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதால், தர்மபுரி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் அம்பிகா உத்தரவு படி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த நடவடிக்கையும், அதற்கான ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி தொப்பையாறு அணையில், நேற்று தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமை வகித்து பேசும்போது, தென்மேற்கு மழையில் மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக்க இருக்க வேண்டும் என்பது குறித்தும், வெள்ளத்தில் சிக்கயவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்தும் பேசினார். தொடர்ந்து தண்ணீர் சிக்கியர்வகளை கயிறு கட்டியும், ரப்பர் படகு மூலமும் மீட்பது, மீட்டவர்களுக்கு முதலுதவி செய்வது குறித்தும் தீயணைப்புதுறையினர் செயல்விளக்கம் செய்து காட்டினர்.