/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 08, 2025 01:45 AM
தர்மபுரி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நல்லம்பள்ளி பி.டிஓ., அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணை செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தேவராசன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.
இதில், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில், தீபாவளி போனஸ், 5,000 ரூபாய் வழங்க வேண்டும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்த, விவசாய தொழிலாளர் நலவாரியத்தை மீண்டும் அமைத்து, செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். வீடில்லா தொழிலாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி, நிபந்தனையின்றி வீடு கட்டி கொடுக்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
* பென்னாகரம் பி.டி.ஓ., அலுவலகம் முன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாநில குழு உறுப்பினர் சிவன் தலைமை வகித்தார். இ.கம்யூ., மாவட்ட செயலாளர் கலைசெல்வம் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், இ.கம்யூ., கட்சியை சேர்ந்த மாநிலக்குழு புள்ளாறு, மாவட்ட குழு கோபால், சின்னம்பள்ளி வட்டார செயலாளர் வெங்கடேசன் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் ஆண்கள், பெண்கள் என, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.