sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ சத்துணவு பணியாளர் ஒன்றியம் தீர்மானம்

சத்துணவு பணியாளர் ஒன்றியம் தீர்மானம்

சத்துணவு பணியாளர் ஒன்றியம் தீர்மானம்


ADDED : நவ 02, 2025 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2025 02:29 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி, தமிழ்நாடு சத்துணவு பணியாளர் ஒன்றியத்தின், மாவட்ட பொதுக்குழு கூட்டம், தர்மபுரியில் நேற்று நடந்தது. சங்க மாவட்ட தலைவர் முனிரத்தினம் தலைமை வகித்தார். மாநில தலைவர் ஜெயக்குமார், மாநில பொதுச்செயலாளர் அண்ணாதுரை, அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில துணைத்தலைவர் சிவக்குமார் உட்பட பலர் பேசினர்.

சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட சத்துணவு மையங்களில் கூடுதல் பொறுப்பு வழங்குவதை கைவிட வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் மதிய உணவிற்கான, 9 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான உணவு மானியம், 7 மாதங்களாக வழங்காமல் நிலுவையில் உள்ளது. காலிப்பணியிடங்கள் அதிகம் உள்ள காரணத்தினால், சத்துணவு அமைப்பாளர்கள் சமைக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, சமையலர், உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.

எம்.ஜி.ஆர்., சத்துணவு திட்டத்தில், 42 ஆண்டுகளாக தொகுப்பூதியம், சிறப்பு கால முறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு பணியாளர்களை தேர்தல் கால வாக்குறுதியில் அறிவித்தது போல் வாக்குறுதி எண், 313ன் படி, காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும். சத்துணவு திட்டத்தில் உள்ள, 60,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

சத்துணவு திட்டத்தில், 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவோம் என்ற அரசின் அறிவிப்பு கிடப்பில் உள்ளது. எனவே, இந்த காலிப்பணியிடங்களை உடடியாக நிரப்ப வேண்டும், என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us