sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

ஊதிய உயர்வு கேட்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

/

ஊதிய உயர்வு கேட்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

ஊதிய உயர்வு கேட்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

ஊதிய உயர்வு கேட்கும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்


ADDED : ஜூலை 17, 2011 02:29 AM

Google News

ADDED : ஜூலை 17, 2011 02:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தமிழகத்தில், 108 ஆம்புலன்ஸில் பணி செய்யும் ஊழியர்களுக்கு, ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து தர்மபுரியை சேர்ந்த, 108 ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவர் கூறியதாவது:விபத்து, உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை தேர்வு செய்யும் போது, அவர்களின் சொந்த ஊரில் அல்லது அருகில் உள்ள ஊரில் பணி நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. தற்போது, ஊழியர்கள் வெவ்வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டு, பணி நேரம் பாராமல் வேலை வாங்கப்படுகின்றனர்.குஜராத் மாநிலத்தில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், 6,000 முதல் 7,000 ரூபாய் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. அகவிலைப்படியை மாத ஊதியத்துடன் சேர்த்து வழங்குவதில்லை. எட்டு மணி நேரத்துக்கும் மேல் பணி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.

பல்வேறு நோயாளிகளை ஏற்றி வரும் நிலையில், ஆம்புலன்ஸை சுகாதார முறையில் பராமரிக்க தனி ஆட்கள் இல்லாததால், துர்நாற்றம் வீசுகிறது. வாகனத்தில் தொழில்நுட்ப கோளாறுகள் அடிக்கடி ஏற்படுவதை தவிர்க்க, அனைத்து உதிரிபாகங்களும் முறையாக காலத்துக்குள் மாற்ற அனுமதிப்பதில்லை.அனைத்து மாவட்டத்திலும், 108 ஆம்புலன்ஸ் செயல்பாட்டில் குறைபாடுகள் தொடந்து நீடிக்கிறது. ஊதிய உயர்வு, பணி மாறுதல் மற்றும் கூடுதல் பணியாட்களை நியமிக்க வேண்டும் என்பது அனைத்து ஊழியர்களின் கோரிக்கையாகவுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us