/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில்ரூ.14.53 கோடிக்கு தீர்வு
/
தேசிய மக்கள் நீதிமன்றத்தில்ரூ.14.53 கோடிக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில்ரூ.14.53 கோடிக்கு தீர்வு
தேசிய மக்கள் நீதிமன்றத்தில்ரூ.14.53 கோடிக்கு தீர்வு
ADDED : மார் 09, 2025 01:58 AM
தேசிய மக்கள் நீதிமன்றத்தில்ரூ.14.53 கோடிக்கு தீர்வு
தர்மபுரி:தர்மபுரி முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தலைவருமான திருமகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-
தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் நேற்று நடந்தது. இதேபோல், அரூர், பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் காரிமங்கலம் உள்ளிட்ட, 5 தாலுகா நீதிமன்றத்திலும் நடந்தது. இதில், 2,359 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு இதில், 906 வழக்குகளுக்கு சமரசம் பேசி தீர்க்கப்பட்டு அதற்காக, 7.95 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. மேலும், வங்கி வாராக்கடன், 182 வழக்குகளுக்கு சமரசம் பேசி, 6.58 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. இதில் மொத்தமாக, 2,583 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 1,088 வழக்குகளுக்கு சமரச தொகையாக, 14.53 கோடி ரூபாய் தீர்வு காணப்பட்டு, அதற்கான ஆணை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.