/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காரிமங்கலத்தில் 1,557 பேருக்கு ரூ.19.52 கோடி நலத்திட்ட உதவி
/
காரிமங்கலத்தில் 1,557 பேருக்கு ரூ.19.52 கோடி நலத்திட்ட உதவி
காரிமங்கலத்தில் 1,557 பேருக்கு ரூ.19.52 கோடி நலத்திட்ட உதவி
காரிமங்கலத்தில் 1,557 பேருக்கு ரூ.19.52 கோடி நலத்திட்ட உதவி
ADDED : டிச 22, 2024 01:24 AM
தர்மபுரி, டிச. 22-
காரிமங்கலத்தில், 1,557 பயனாளிகளுக்கு, 19.52 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை, அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் நேற்று
வழங்கினர்.
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு விழா, மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது. பேரூராட்சிகள் துறை இயக்குனர் கிரண் குராலா முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் நேரு, பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆகியோர் முடிவுற்ற திட்ட பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.இதில், பாப்பாரப்பட்டி பேரூராட்சியில், 2.74 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்ட வாரச்சந்தை, காரிமங்கலத்தில், 1.40 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிய அறிவுசார் மையம், அடிலம் பஞ்.,ல் பூனாத்தனஹள்ளி முதல் அ.சப்பாணிப்பட்டி வரை, 2.07 கோடி ரூபாய் மதிப்பில் கட்டிய புதிய உயர்மட்ட பாலம், புலிக்கல் பஞ்.,ல், 2.14 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூலாப்பட்டி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய உயர்மட்ட பாலம் மற்றும் உப்புபள்ளம் முதல் ஆத்துக்கொட்டாய் வரை அமைக்கப்பட்டுள்ள சாலை, காளப்பனஹள்ளிபுதுாரில், 14 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய அங்கன்வாடி மைய கட்டடம் என, 8.49 கோடி ரூபாய் மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண் துறை, தொழிலாளர் நலத்துறை, ஊரக நலப்பணிகள், வனத்துறை சார்பில், மொத்தம், 1,557 பயனாளிகளுக்கு, 19.52 கோடி ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர்.
தொடர்ந்து, அமைச்சர் நேரு பேசுகையில், ''நகராட்சி நிர்வாகத்துறை சார்பில், காரிமங்கலம் பேரூராட்சிக்கு கடந்த, 3 ஆண்டில், 28.43 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் முடிக்கப்பட்டும், நடந்தும் வருகிறது,'' என்றார்.
அமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், தமிழக துணை முதல்வர் உதயநிதி, ஆங்காங்கே நுாலகங்களை திறந்து வருகிறார். அதை, மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.
விழாவில், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) கணேஷ், காரிமங்கலம் பேரூராட்சி சேர்மன் மனோகரன், தர்மபுரி ஆர்.டி.ஓ., காயத்ரி, காரிமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா, தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் பழனியப்பன், தடங்கம் சுப்பிரமணி உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து, காரிமங்கலத்தில், கலைஞர் நகர் மேம்பாட்டு திட்டத்தில், 1.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, அறிவுசார் மைய கட்டடத்தை அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி ஆகியோர் முன்னிலையில், அமைச்சர் பன்னீர்செல்வம் ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார்.