/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
முதல்வர் தனிப்பிரிவு புகார்களில்171 மனுக்கள் தீர்வு; சேலம் எஸ்.பி.,
/
முதல்வர் தனிப்பிரிவு புகார்களில்171 மனுக்கள் தீர்வு; சேலம் எஸ்.பி.,
முதல்வர் தனிப்பிரிவு புகார்களில்171 மனுக்கள் தீர்வு; சேலம் எஸ்.பி.,
முதல்வர் தனிப்பிரிவு புகார்களில்171 மனுக்கள் தீர்வு; சேலம் எஸ்.பி.,
ADDED : பிப் 18, 2025 12:47 AM
முதல்வர் தனிப்பிரிவு புகார்களில்171 மனுக்கள் தீர்வு; சேலம் எஸ்.பி.,
ஆத்துார்:''முதல்வர் தனிப்பிரிவு மற்றும் பொதுமக்கள் குறைதீர் முகாமில் வந்த மனுக்களை விசாரணை செய்து, 171 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது,'' என, சேலம் எஸ்.பி., கூறினார்.
சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் தனிப்பிரிவு அலுவலகம் உள்ளது. மாநிலம் முழுவதுமிருந்து நேரிலும் மற்றும் இணையதளம் மூலமாகவும் ஏராளமானோர் புகார் அளிக்கின்றனர். உள்ளூர் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல இங்கு மனு கொடுக்கின்றனர். ஆனால் இங்கு கொடுக்கப்படும் மனுக்கள், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளிடமே, மீண்டும் அனுப்பப்படுகின்றன. அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து விட்டதாக, முதல்வர் அலுவலகத்திற்கு பதில் அனுப்பி விடுகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள், அந்தந்த போலீஸ் சப்-டிவிசன்களில் விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி ஆத்துார் டி.எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று முன்தினம், பொதுமக்கள் குறைதீர் முகாம் நடந்தது. மனு அளித்த, 50 பேர், புகாருக்கு உள்ளான, 57 பேர் கலந்து கொண்டனர். புகார் தன்மை குறித்து, போலீசார் விசாரணை நடத்தினர்.இதுகுறித்து, சேலம் எஸ்.பி., கவுதம்கோயல் கூறுகையில், ''சேலம் ரூரல், ஆத்துார், ஓமலுார், மேட்டூர், சங்ககிரி, வாழப்பாடி ஆகிய ஆறு சப்-டிவிசன்களிலும், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மற்றும் மாவட்ட எஸ்.பி.,க்கு அனுப்பிய பொதுமக்கள் குறைதீர் முகாம் மனுக்கள் குறித்து, புகார் அனுப்பியவர்கள், எதிர்தரப்பினரை வரவழைத்து விசாரணை செய்யப்பட்டது. ஆறு சப்-டிவிசன்களிலும், 183 மனுக்களில், 171 மனுக்கள் விசாரணை செய்து தீர்வு காணப்பட்டுள்ளது,'' என்றார்.

