/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பவளந்துாரில் அடுத்தடுத்து2 கோவில்களில் திருட்டு
/
பவளந்துாரில் அடுத்தடுத்து2 கோவில்களில் திருட்டு
ADDED : பிப் 07, 2025 01:17 AM
பென்னாகரம், : தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள வட்டுவனஅள்ளி பஞ்., பவளந்துாரில், ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சென்றாய பெருமாள் சுவாமி கோவில், நுாற்றாண்டுகள் பழமையானது. இக்கோவிலுக்கு சொந்தமாக, 50 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு குமரன் என்பவர் பூசாரியாக உள்ளார். ஆண்டுக்கு ஒரு முறை, ஊர் பண்டிகை மற்றும் புரட்டாசி மாதத்தில், 5 சனிக்கிழமையும் விழா கொண்டாடுவது வழக்கம்.
நேற்று முன்தினம் இரவு, பூஜை முடிந்து வழக்கம்போல் பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார். நேற்று காலை வந்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, உண்டியலை உடைத்து, அதிலிருந்த காணிக்கை, சுவாமி கழுத்திலிருந்த தங்கத்தாலி, குண்டு செயின் என, 2.5 பவுன் தங்க நகை திருடு போனது தெரிந்தது. கோவிலுக்கு அருகாமையிலுள்ள புதுார் மாரியம்மன் கோவிலும் உண்டியல் உடைக்கப்பட்டு, சுவாமி கழுத்திலிருந்த, அரை பவுன் தங்கத்தாலி திருடு போனது தெரியவந்தது.
தகவலறிந்த பென்னாகரம் டி.எஸ்.பி., மகாலட்சுமி, இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

