ADDED : பிப் 23, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குட்கா கடத்திய 2 பேர் கைது
காரிமங்கலம்:தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஆனந்தகுமார் நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், கும்பாரஹள்ளி செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக வந்த டாடா மினி கன்டெய்னரை நிறுத்தி சோதனை செய்தார். அதில், அரசால் தடை செய்யப்பட்ட, 2.70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 491 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிந்தது. வாகனத்தை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம் மோடகனஹள்ளியை சேர்ந்த கிரிஷ், 34, மசோஹள்ளியை சேர்ந்த ஹேமந்த்குமார், 29 ஆகிய இருவரையும் கைது செய்து, புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.