/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொப்பூரில் 3 லாரிகள் மோதல்மூன்று டிரைவர்கள் படுகாயம்
/
தொப்பூரில் 3 லாரிகள் மோதல்மூன்று டிரைவர்கள் படுகாயம்
தொப்பூரில் 3 லாரிகள் மோதல்மூன்று டிரைவர்கள் படுகாயம்
தொப்பூரில் 3 லாரிகள் மோதல்மூன்று டிரைவர்கள் படுகாயம்
ADDED : பிப் 18, 2025 12:44 AM
தொப்பூரில் 3 லாரிகள் மோதல்மூன்று டிரைவர்கள் படுகாயம்
தொப்பூர்:ஆந்திராவில் இருந்து சேலத்திற்கு சிமென்ட் லோடு ஏற்றிய லாரியை, கர்நாடகாவை சேர்ந்த ராஜ்நாத், 45, என்பவர் ஓட்டி வந்தார்.
தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு லாரி வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து, முன்னாள் சென்ற பார்சல் சர்வீஸ் லாரி மீது மோதியது. இதில், பார்சல் சர்வீஸ் லாரி, எதிர் திசையில் வந்த ஈச்சர் லாரியின் மீது, மோதி விபத்துக்குள்ளானது.
இதில், சிமென்ட் மற்றும் பார்சல் சர்வீஸ் லாரி சாலையில் கவிழ்ந்தது. இதில், டிரைவர் ராஜநாத், பார்சல் சர்வீஸ் லாரி டிரைவர் பச்சையா, 37, உட்பட, 3 டிரைவர்கள் காயமடைந்தனர். தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து குழுவினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால், தேசிய நெடுஞ்சாலையில், 2 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. போலீசார் உதவியோடு மீட்புக்குழுவினர் விபத்துக்குள்ளான லாரிகளை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.