/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பேட்டரி திருடிய 3 பேருக்கு காப்பு
/
பேட்டரி திருடிய 3 பேருக்கு காப்பு
ADDED : பிப் 23, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேட்டரி திருடிய 3 பேருக்கு காப்பு
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் மொபைல்போன் டவரில் இருந்து பேட்டரிகள் திருட்டு போனது. மொரப்பூர் எஸ்.ஐ., முருகேசன் மற்றும் எஸ்.எஸ்.ஐ., பரமேஸ்வரன், வினோத், சேதுபதி, ரகு ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சம்பவம் நடந்த பகுதியில் இருந்த, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர். அதில், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேட்டரிகளை திருடியதாக கொளகம்பட்டி இளந்தமிழன், 33, கோம்பை விஜயன், 34, கிருஷ்ணகிரி மாவட்டம், அவதானப்பட்டி அசோக், 32, ஆகிய, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.