/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல்லில் கெட்டுப்போன 70 கிலோ மீன்கள் பறிமுதல்
/
ஒகேனக்கல்லில் கெட்டுப்போன 70 கிலோ மீன்கள் பறிமுதல்
ஒகேனக்கல்லில் கெட்டுப்போன 70 கிலோ மீன்கள் பறிமுதல்
ஒகேனக்கல்லில் கெட்டுப்போன 70 கிலோ மீன்கள் பறிமுதல்
ADDED : பிப் 23, 2025 01:56 AM
ஒகேனக்கல்லில் கெட்டுப்போன 70 கிலோ மீன்கள் பறிமுதல்
ஒகேனக்கல்: தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் காவிரியாற்றில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும், மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டு மகிழ்வதும் வழக்கம். கடந்த சில மாதங்களாக ஒகேனக்கல்லில் உள்ள மீன் விற்பனை கூடங்களில் கெட்டுப்போன பழைய மீன்களை விற்பனை செய்வதாக, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. மாவட்ட கலெக்டர் சதீஸ் உத்தரவின் படி, தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானுசுஜாதா மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர் கோகுலரமணன் ஆலோசனை படி, உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கந்தசாமி மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர் வேலுசாமி தலைமையிலான ஊழியர்கள், ஒகேனக்கல்லில் உள்ள, 25க்கும் மேற்பட்ட மீன் விற்பனை நிலையங்களில் சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன, 70 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, மண்ணில் குழித்தோண்டி புதைக்கப்பட்டன. தொடர்ந்து, வியாபாரிகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டு, கெட்டுப்போன மீன்கள், பார்மிலின் கெமிக்கல் பூசப்பட்ட மீன்களை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.