/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தனித்துவமான அடையாள எண்விவசாயிகளுக்கு 8 வரை கெடு
/
தனித்துவமான அடையாள எண்விவசாயிகளுக்கு 8 வரை கெடு
ADDED : ஏப் 01, 2025 01:39 AM
சேலம்:சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் வெளியிட்டுள்ள அறிக்கை:விவசாயிகள், அரசின் திட்டங்களை குறித்த நேரத்தில் பெற ஏதுவாக, அனைத்து விபரங்களும் மின்னணு முறையில் சேகரிக்கும் வேளாண் அடுக்கு திட்டம், தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறைகளை சேர்ந்த கள அலுவலர்கள், மகளிர் திட்ட சமுதாய பயிற்றுனர்கள், இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள் மூலம், அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டு விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தற்போது,அனைத்து பொதுசேவை மையங்களிலும் இலவசமாக பதிவேற்றம் செய்யும்பணி நடக்கிறது. எனினும் மாவட்டத்தில், பி.எம்.கிசான் ஊக்கத்தொகை பெறும், 1,18,341 விவசாயிகளில், 64,272 பேர் மட்டும் தனித்துவ அடையாள எண்ணுக்கு பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள, 54,069 விவசாயிகள் விரைவாக தங்களின் ஆதார், நிலம் தொடர்பான பட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகிய விபரங்களுடன் வேளாண் அலுவலர்கள் அல்லது இ.சேவை மையங்களை தொடர்பு கொண்டு உடனடியாக பதிவு செய்திட வேண்டும்.
பி.எம். கிசான் ஊக்கத்தொகை பெறும் விவசாயிகள், அத்தொகையை தொடர்ந்து பெற, வரும் ஏப்.,8 க்குள், உழவர் நலத்துறை அலுவலர்களை உடனடியாக தொடர்பு கொண்டு தனித்துவமான அடையாள எண்ணுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளார்.