/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவரை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
/
பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவரை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவரை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவரை கண்டித்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ADDED : ஆக 31, 2024 01:05 AM
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவரை கண்டித்து, அ.திமு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று மன்ற அரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் செல்வ ராஜ், துணைத் தலைவர் பால முருகன் முன்னிலையில் கூட்டம் துவங்கியது. மொத்தம், 21 தீர்-மானங்கள் வாசிக்கப்பட்டது. இதையடுத்து விவாதம் துவங்கியது.
இதன் விபரம்: அ.தி.மு.க., கவுன்சிலர் செந்தில்: வார்டில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, நகராட்சி அதிகாரிகள், பணியாளர்களிடம் நான் தெரிவித்தால் செய்வதில்லை, இதே பணியை நகராட்சி தலைவர் சொன்னால் அதிகாரிகள்,
பணியாளர்கள் செய்கின்றனர். எனவே, எனது ஊக்கத்தொகையை நகராட்சி தலைவருக்கு தந்து விடுங்கள்.
அ.தி.மு.க., கவுன்சிலர் சரவணன்: நகரமன்ற கூட்டத்தில் பேசுவ-தற்கு வாய்ப்பு தருவதில்லை. வார்டில் ஆய்வுக்கு வரும் போது தலைவர் தகவல் தெரிவிப்பதில்லை.அ.தி.மு.க., கவுன்சிலர் சுரேஷ் (எ) கோபாலகிருஷ்ணன்: என் வார்டில் பள்ளம் தோண்டி போடப்பட்ட சாலையை சீரமைக்க வேண்டும் என, இரண்டு மாதங்களுக்கு முன்பு கடிதம் கொடுத்தேன். இன்னும் நிறைவேற்றவில்லை.
நான் சொன்னது மட்டுமே கேட்க வேண்டும் என, தலைவர் கூறுகிறார். இது கண்-டிக்கத்தக்கது.
இவ்வாறு பேசியதும் தலைவருக்கும், அ.தி.மு.க., கவுன்சிலர்க-ளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் திடீ-ரென தலைவர் செல்வராஜ், கூட்டத்தை முடித்து விடுவேன் என, தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு
தெரிவித்து, ம.தி.மு.க., கவுன்-சிலர் சிவம் பேசுகையில்,''நகராட்சி தலைவர் கூட்டத்தை பாதியி-லேயே முடிப்பதாக கூறுவது சரியில்லை, அனைத்து கவுன்சிலர்-களின் கேள்விகளுக்கு தலைவர் பதில் சொல்ல வேண்டும். அதை
செய்யாமல் கூட்டம் பாதியில் முடிப்பது கண்டிக்கத்தக்கது, தலை-வருக்கு தான் கெட்ட பெயர்,'' என்றார்.ஆனால், தலைவர் கூட்டம் முடிந்து விட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி என கூறி விட்டு வெளியேறினார்.
இதையடுத்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள், எங்கள் கேள்விகளுக்கு தலைவர் பதில் சொல்ல வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, வலியுறுத்தி கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து, நகராட்சி
தலைவர் செல்வராஜ் நிருபர்களிடம் கூறுகையில்,'' நகராட்சி பகுதியில் வளர்ச்சி பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது. தேவையில்லாமல் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். நம்-பிக்கை இல்லா தீர்மானம்
கொண்டு வந்தால் சந்திக்க தயார்,'' என்றார்.கவுன்சிலர்களிடம், நகராட்சி கமிஷனர் தாமரை பேச்சு வார்த்தை நடத்தினார். இதில், வார்டில் செய்ய வேண்டிய பணிகளை இரண்டு நாளில் செய்யப்படும் என, கமிஷனர் உறுதி அளித்தார். இதையடுத்து மாலை, 3:00 மணிக்கு
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.