/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை
/
மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட பூமி பூஜை
ADDED : ஆக 31, 2024 12:53 AM
தர்மபுரி: ஒட்டப்பட்டியில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்ட, தர்மபுரி எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டினார்.
தர்மபுரி அடுத்த, நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டப்பட்டியில், 300 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு, ஏற்கனவே உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து
வழங்கப்பட்ட குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இந் நிலையில், ஜல்ஜீவன் மிஷன், நபார்டு திட்டத்தின் மூலம், 29.97 லட்சம் ரூபாய் மதிப்பில், 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணிக்கான, பூமி பூஜை ஒன்றிய கவுன்சிலர் சோனியாகாந்தி வெங்கடேசன் தலைமையில் நேற்று நடந்தது. தர்மபுரி பா.ம.க.,- எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன் பூமி பூஜை செய்து அடிக்கல்
நாட்டினார். இதில், நல்லம்பள்ளி பி.டி.ஓ., லோகநாதன், உதவி பொறியாளர் ஸ்ரீதர், ஒன்றிய கவுன்சிலர்கள் காமராஜ், அன்புகார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.