/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'தமிழக எம்.பி.,க்கள் கோரிக்கை வைத்தால் மத்திய அரசு திட்டங்களை வழங்க தயார்'
/
'தமிழக எம்.பி.,க்கள் கோரிக்கை வைத்தால் மத்திய அரசு திட்டங்களை வழங்க தயார்'
'தமிழக எம்.பி.,க்கள் கோரிக்கை வைத்தால் மத்திய அரசு திட்டங்களை வழங்க தயார்'
'தமிழக எம்.பி.,க்கள் கோரிக்கை வைத்தால் மத்திய அரசு திட்டங்களை வழங்க தயார்'
ADDED : ஆக 06, 2024 02:22 AM
கிருஷ்ணகிரி, ''தமிழக, எம்.பி.,க்கள் கோரிக்கை வைத்தால், திட்டங்களை நிறைவேற்ற, மத்திய அரசு தயாராக உள்ளது,'' என, பா.ஜ., மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் கூறினார்.
கிருஷ்ணகிரியில் நேற்று, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மத்திய பட்ஜெட்டில், நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் ஏராளம். இதில், தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை. தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்து, எம்.பி.,க்கள் லோக்சபாவில் பேசவில்லை. தமிழகம், புதுச்சேரியிலுள்ள, 40 எம்.பி.,க்களும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் டில்லி சென்று, பிரதமரிடம் கோரிக்கை வைத்தால், திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசு தயாராக உள்ளது. அதை விடுத்து, தனிநபர் விமர்சனங்களை, தி.மு.க.,வினர் செய்கின்றனர். பீஹார், ஆந்திராவில், கூட்டணி தர்மம் அடிப்படையில் சில திட்டங்களை, மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. அது தவிர, ஆந்திராவுக்கு தலைமை நிலையம் அமைக்க, 60,000 கோடி ரூபாயை அம்மாநில அரசு கேட்டது. அதன்படி சில திட்டங்களுக்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின், 'நிதி ஆயோக்' கூட்டத்தில் கூட பங்கேற்கவில்லை.
'ஓசூர் - கிருஷ்ணகிரி - ஜோலார்பேட்டை ரயில் திட்டம் குறித்து நீங்கள் தான் பேசுகிறீர்கள்' என மத்திய ரயில்வே அமைச்சர் கடந்த வாரம் பேசினார். நிலைமை அப்படியிருக்கிறது. எப்படி இருப்பினும், கிருஷ்ணகிரி ரயில் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தும். அதேபோல ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என, நடக்காத விஷயத்தை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். ஓசூர் அருகே உள்ள தனியார் விமான நிலைய அதிகாரிகளுடன் பெங்களூரு விமான நிலைய அதிகாரிகளை சேர்த்து, தமிழக, கர்நாடக முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம். அதை விடுத்து சாத்தியமில்லாத வகையில், 2,000 ஏக்கரில் விமான நிலையம் அமைப்போம் எனக்கூறுவது ஏற்புடையதல்ல. மாநில அரசுக்கு தேவையானவற்றை கேட்டால் தான், மத்திய அரசு அதற்கான நிதியை ஒதுக்கும் என்பதை, புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
அவருடன் கிருஷ்ணகிரி, பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜேந்திரன், செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.