/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் விநாயகர் சதுர்த்தி விழா விதிகள் படி சிலைகளை கரைக்க கலெக்டர் வேண்டுகோள்

ADDED : ஆக 31, 2024 12:53 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், விநாயகர் சிலைகள் கரைப்பது குறித்து, கலெக்டர் சாந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் கலெக்டர் பேசியதாவது:நீர்நிலைகளான கடல், ஆறு மற்றும் குளங்கள், மக்களுக்கு குடிநீர் ஆதாரத்தை தந்து வருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்க மத்திய அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழிமுறைகளை அறிவித்துள்ளது. இதற்கு,
www.tnpcb.gov.in என்ற இணைய தளத்தில் சென்று பொதுமக்கள் பார்வையிட்டுக் கொள்ளலாம். மேலும், மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளபடி, குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைத்து, சுற்றுச்
சூழலை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எனவே, களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே பக்தர்கள் பயன்படுத்த வேண்டும். மேலும், வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தயாரிக்கப்படும்
சிலைகளுக்கு கண்டிப்பாக வர்ணப்பூச்சுகளை பயன்படுத்த கூடாது. மாற்றாக, சுற்றுச்சூழலை பாதிக்காத நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். அரசு அறித்துள்ளதன்படி, வாணியாறு,
வரட்டாறு, ஒகேனக்கல், தென்பென்னையாறு உள்ளிட்ட இடங்களில் மட்டுமே, விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.