/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'கட்சியினருக்கு ஒன்றும் செய்யவில்லை' பொது உறுப்பினர் கூட்டத்தில் குமுறல்

ADDED : செப் 04, 2024 10:10 AM
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் மேற்கு ஒன்றிய, தி.மு.க., பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம், கடத்-துாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம் செய்திருந்தார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுகையில், 'தொண்டர்களை நிர்வாகிகள் மதிக்க வேண்டும். மக்களிடம் ஓட்டு கேட்க, நாங்கள் தான் செல்-கிறோம். கடந்த மூன்றரை ஆண்டு கால, தி.மு.க., ஆட்சியில் கட்சியினருக்கு என்ன செய்துள்-ளீர்கள். ஒன்றும் செய்யவில்லை. வேலை வாய்ப்பு, பதவி கொடுத்துள்ளீர்களா, ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் யாரையும் மதிப்பதில்லை. இனிவரும் காலங்-களில் தொண்டர்களை மதிக்க வேண்டும். அப்-போதுதான், சட்டசபை தேர்தலில் நாங்கள் மக்க-ளிடம் சென்று ஓட்டு கேட்க முடியும்' என்றனர்.
இதற்கு பதிலளித்த மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன், இனிவரும் காலங்களில் இது போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும் என கூறி-யதுடன், உள்ளாட்சி, கூட்டுறவு மற்றும் சட்ட-சபை தேர்தல், கட்சி பணிகள் குறித்து பேசினார். கூட்டத்தில், தர்மபுரி எம்.பி., மணி, நிர்வாகிகள் மனோகரன், சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பிடித்தம் செய்த பணத்தை திருப்பி தர வேண்டும்