/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
/
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
ADDED : மார் 12, 2025 08:01 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:ஓசூர், மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் வரும், 14ல் நடக்கிறது. இதையொட்டி, ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை மற்றும் அஞ்செட்டி ஆகிய, 4 தாலுகாவில் உள்ள அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு (பொதுத்தேர்வு தவிர்த்து) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அதை ஈடுகட்டும் வகையில் வரும், 22ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச்சட்டத்தின் படி அறிவிக்கப்படவில்லை என்பதால், ஓசூர் கோட்டத்திற்கு உட்பட்ட கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள், அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.