ADDED : ஆக 16, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிமங்கலம், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் மல்லிகுட்டை பஞ்., உட்பட்ட போத்தாபுரம் பகுதியில் பெரிய ஏரி ஒன்று உள்ளது.
இதில் கடந்த சில மாதங்களாக ஏரி பராமரிப்பு பணிகள் மற்றும் கரை பலப்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. பணிகள் முடிந்த நிலையில், இப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் ஏரியில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதை பயன்படுத்தி, அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நட முடிவு செய்தனர். நேற்று, 78வது சுதந்திர தினத்தையொட்டி, போத்தபுரம் ஏரிக்கரை முழுவதும், 1,000 பனை விதைகள் மற்றும் சில வேப்ப மரக்கன்றுகளை நட்டனர். இதில் போத்தாபுரத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் உள்பட, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

