/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
ADDED : ஆக 16, 2024 12:59 AM
பென்னாகரம், பென்னாகரத்ததை அடுத்த அளேபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நேற்று, சுதந்திர தின விழா தலைமை ஆசிரியர் முகமது அலி தலைமையில் நடந்தது.
பள்ளியில் சிறப்பாக பயிலும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு தரப்பினர் பரிசுகளையும், நிதி உதவியையும் அளித்தனர். அதன்படி உதவி தலைமை ஆசிரியர் தமிழ்செல்வன், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல், 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, 2,000, 1,500, 1,000 என நிதியுதவி வழங்கினார். கூத்தப்பாடி பஞ்., துணைத்தலைவர் மணி, 10ம் வகுப்பில் முதல், 3 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, 3,000, 2,000, 1,000 ரூபாய் வழங்கி, 6 முதல், 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளையும் வழங்கினார். பென்னாகரம் கனரா வங்கி கிளை சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி பெண் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக, 5 பேருக்கு, மொத்தம், 21,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. பென்னாகரம் ஸ்ரீராம் பேங்க் சார்பாக, 52 மாணவர்களுக்கு, தலா, 4,000 என, மொத்தம், 2.08 லட்சம் ரூபாயை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

