ADDED : செப் 02, 2024 02:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில், கடந்த ஒரு வாரமாக தொடர்-மழை பெய்து வருகிறது. இதையடுத்து, தீர்த்தமலை, நரிப்பள்ளி, கோட்டப்பட்டி, அச்சல்வாடி, கீரைப்பட்டி, வாச்சாத்தி, தொட்டம்-பட்டி, கீழானுார், மாம்பாடி, வேப்பம்பட்டி, பறையப்பட்டி உள்-ளிட்ட சுற்று வட்டாரத்தில், நெல் நடவுக்காக உழவு பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக ஏற்கனவே, நாற்றங்காலில் நெல் விதைப்பு செய்யப்பட்டு நாற்று வளர்ந்து
நடவுக்கு தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், ஆழ்துளை மற்றும் கிணற்று பாசனம் மூலம், நிலத்தை டிராக்டரை கொண்டு உழுது பண்படுத்தி, நாற்று பறித்து சம்பா நடவு பணியை விவசா-யிகள் துவங்கி உள்ளனர். இதன்
அறுவடை டிசம்பர் கடைசி அல்-லது ஜனவரி மாதத்தில் நடக்கும்.