/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8,000 கன அடியாக சரிவு
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 8,000 கன அடியாக சரிவு
ADDED : ஆக 08, 2024 05:49 AM
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 8,000 கன அடியாக சரிந்தது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால், கர்நாடகாவிலுள்ள அணைகள் நிரம்பி, நீர்வரத்து அதி-கரித்துள்ளது. அணை பாதுகாப்பு கருதி, காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நேற்று கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 2,729 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 5,346 கன அடி என, மொத்தம், 8,075 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்-ளது.
தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு வினாடிக்கு, 17,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 6:00 மணிக்கு, 8,000 கன அடியாக சரிந்தது.
ஒகேனக்கல் காவிரியாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கின் போது, சேதமான மெயின் பால்ஸ், நடைப்பாதை, பெண்கள் குளிக்கும் இடம் உள்ளிட்ட பகுதிகளை பென்னாகரம் பி.டி.ஓ., சுருளி-ராஜன், ஷகிலா, பாலாஜி ஆகியோர் ஆய்வு செய்தனர். தொடர்ந்து நேற்று, 23 வது நாளாக
காவிரியாற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் தடை உள்ள நிலையில், நீர்வரத்து சரிந்ததால், பரிசல் இயக்கும் இடத்தையும், அதிகாரிகள் பார்வையிட்டு சென்-றனர்.