/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாப்பிரெட்டிப்பட்டியில்கோவில் தேரோட்டம்
/
பாப்பிரெட்டிப்பட்டியில்கோவில் தேரோட்டம்
ADDED : பிப் 13, 2025 01:31 AM
பாப்பிரெட்டிப்பட்டியில்கோவில் தேரோட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி,பாப்பிரெட்டிப்பட்டியில் வேலவன் குன்று வேல்முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா நடக்கும். அதன்படி கோவிலில் நேற்று முன்தினம், 63ம் ஆண்டு தைப்பூச பெருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை, பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது.
பின்னர் மாலை அலங்கரிக்கப்பட்ட முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வீதியுலா வரும் தேரோட்டம் நடந்தது. தேரோட்டம் கோவிலில் இருந்து புறப்பட்டு பாப்பிரெட்டிப்பட்டி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, கோவிலை அடைந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் வடம் பிடித்து தேரை இழுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

