ADDED : மார் 13, 2025 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'மஞ்சப்பை' விழிப்புணர்வு
அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 'மஞ்சப்பை' விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் ஆறுமுகம் தலைமை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் பழனிதுரை முன்னிலையில், தேசிய பசுமை படை மாணவர்களுக்கு, 'மஞ்சப்பை' வழங்கப்பட்டது. மேலும், பிளாஸ்டிக் இல்லா பள்ளியாக மாற்றவும், பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள், ஓசோன் படலம் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துாய்மை குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.