/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 28, 2025 01:22 AM
தர்மபுரி:
சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர், தர்மபுரி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன், நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் கரிகாலன் உட்பட பலர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பொது சுகாதார துறையில், 100 சதவிகிதம் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை -2 பணியிடங்களை போர்கால அடிப்படையில் நிரப்ப வேண்டும். 2,715 சுகாதார ஆய்வாளர் நிலை 2 கூடுதல் பணியிடங்களுக்கு ஒப்புதல் கோரி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் அவர்களால் அனுப்பப்பட்ட கருத்துருவுக்கு உடனடியாக தமிழக அரசு ஒப்புதல் வழங்க வேண்டும். பொது சுகாதார துறையில் பல்வேறு கொள்ளை நோய்களான நரம்பு சிலந்தி, பெரியம்மை, காலரா, போலியோ, கொரோனா, தொழுநோய், மலேரியா, யானைக்கால் நோய், டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்களை கட்டுப்படுத்தி இன்றளவும் பொதுமக்களுக்கு மிகச்சிறப்பாக பணி புரிந்து வரும் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை குறைக்கும் போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.