ADDED : ஏப் 03, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யானைகளால் பயிர்கள் சேதம்
ஓசூர்:தேன்கனிக்கோட்டை வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, 20க்கும் மேற்பட்ட யானைகள், மலசோனை கிராமத்திற்குள் நுழைந்தன. அப் பகுதியில் உள்ள விவசாயி பசவராஜிற்கு சொந்த மான நிலத்திற்குள் புகுந்து, தென்னை, பாக்கு, பப்பாளி மரங்களை சாய்த்து சேதப்படுத்தின.
மேலும், ஆழ்துளை கிணற்றின் பைப்புகளை யானைகள் சேதப்படுத்திய போது, மோட்டார் கட்டாகி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. நேற்று காலை நிலத்திற்கு சென்ற விவசாயி கடும் அதிர்ச்சியடைந்தார். சேதமான பயிர்கள் மற்றும் பொருட்களுக்கு வனத்துறையினர் உடனடியாக இழப்பீடு வழங்க, விவசாயி கோரிக்கை
விடுத்துள்ளார்.