/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாரம்பரிய விவசாயம்பெண்கள் வலியுறுத்தல்
/
பாரம்பரிய விவசாயம்பெண்கள் வலியுறுத்தல்
ADDED : ஏப் 10, 2025 01:14 AM
பாரம்பரிய விவசாயம்பெண்கள் வலியுறுத்தல்
ஆத்துார்:சேலம் மாவட்டம் நரசிங்கபுரத்தில், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு, களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் சார்பில், 30வது பெண் விவசாயிகள் மாநாடு, நேற்று நடந்தது. சங்க தென்காசி மாவட்ட நிர்வாகி பொன்னுதாய் தலைமை வகித்தார்.
அதில் பெண் விவசாயிகளுக்கு பெண் விவசாயி எனும் அடையாள அட்டை வழங்குதல்; மத்திய அரசின், 2013 உணவு பாதுகாப்பு சட்டத்தை, தமிழக அரசு அமல்படுத்தல்; பாரம்பரிய விதைகளை சேமிக்கும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல்; பாரம்பரிய விதைகளை கொண்டு விவசாயம் மேற்கொள்ளுதல்; விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து, அரசு கொள்முதல் செய்தல்; பெண் விவசாயிகளின் விளை பொருட்களை உள்ளூர் சந்தையில் விற்க முன்னுரிமை அளித்தல்; நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் என்பன உள்பட, 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆத்துார் தாசில்தார் பாலாஜி, நரசிங்கபுரம் நகராட்சி கமிஷனர் ஜீவிதா, விவசாய சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

