ADDED : ஏப் 19, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம்:பென்னாகரத்தில்,
100 நாள் வேலை திட்டத்தில், வேலை செய்த தொழிலாளர்களுக்கு வழங்க
வேண்டிய, ஐந்து மாத சம்பளத்தை வழங்ககோரி, தமிழ் மாநில விவசாய
தொழிலாளர் சங்கத்தினர் சார்பில் நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
தர்மபுரி
மாவட்டம், பென்னாகரம் இந்தியன் வங்கி அருகே ஆர்ப்பாட்டத்தில் தமிழ்
மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஈடுபட்டனர். சங்க மாவட்ட
செயலாளர் தேவராசன் தலைமை வகித்தார். மாநில தலைவர் மற்றும் மாஜி
எம்.எல்.ஏ., பெரியசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார்.