/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தமிழ்நாடு விவசாயிகள்சங்கத்தினர் சாலைமறியல்
/
தமிழ்நாடு விவசாயிகள்சங்கத்தினர் சாலைமறியல்
ADDED : ஏப் 22, 2025 01:37 AM
உத்தனப்பள்ளி:ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளியிலுள்ள, மா.கம்யூ., கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்திற்கு சொந்தமான, இரண்டே முக்கால் சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, கொலை மிரட்டல் விடுத்த தனி நபர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடந்த, 15ல், தர்ணா போராட்டம் நடந்தது. திங்கட்கிழமைக்குள் நிலத்தை சர்வே செய்து ஒப்படைப்பதாக தாசில்தார் வளர்மதி தெரிவித்தார்.
ஆனால் நேற்று வரை சர்வே செய்து நிலம் ஒப்படைக்கவில்லை. இதை கண்டித்து, பிரச்னைக்குரிய நிலத்தின் அருகே, உத்தனப்பள்ளியிலுள்ள ஓசூர் சாலையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், நேற்று மதியம் மாநில செயலாளர் பெருமாள், மாவட்ட செயலாளர் பிரகாஷ், தலைவர் முருகேஷ் உட்பட, 40 க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., ஆனந்தராஜ், சூளகிரி துணை தாசில்தார் தீபா பேச்சுவார்த்தை நடத்தி, வரும், 24ம் தேதிக்குள் நிலத்தை சர்வே செய்து வழங்குவதாக தெரிவித்ததால், மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.