நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்கோடு, பாலக்கோடு தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு சேலம், தேசிய சேவா சமிதி மற்றும் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து, நடத்திய தன்னார்வ ரத்த தான முகாம் நடந்தது. பள்ளி தாளாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.
பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் முகாமை தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சிக்கு, பாலக்கோடு டி.எஸ்.பி., மனோகரன் முன்னிலை வகித்தார். இதில், 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்களை, தேசிய சேவா சமிதி சங்கத்தினர் வழங்கினர்.