/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 22, 2025 01:36 AM
அரூர், அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய தலைவர் கோமதி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்களை, தரவுகளை சேகரிப்பது என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிரமங்களுக்கு உட்படுத்தி வருகிறது. மைய பணிகளை செய்வதற்கு, 5ஜி மொபைல்போன், 5ஜி சிம் கார்டு வழங்க வேண்டும்.
அந்தந்த கிராமத்தின் நெட்வொர்க்கிற்கு ஏற்ப சிம் கார்டு வழங்க வேண்டும். பயனாளிகளுக்கு சத்து மாவு வழங்குவதற்கு முகப்பதிவு போட்டோ முறையை கைவிட வேண்டும். இ.கே.ஓய்.சி., ஆதார் எண், ஓ.டி.பி., மற்றும், எப்.ஆர்.எஸ்., முறையை முற்றிலும் கைவிட வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

