/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
100 நாள் வேலை திட்டத்தில் பணி கேட்டுஅரூர் யூனியன் ஆபீசை பெண்கள் முற்றுகை

ADDED : பிப் 07, 2025 01:19 AM
100 நாள் வேலை திட்டத்தில் பணி கேட்டுஅரூர் யூனியன் ஆபீசை பெண்கள் முற்றுகை
அரூர் : தாமரைக்கோழியம்பட்டி கிராம பெண்கள், 100 நாள் வேலை திட்டத்தில் பணி கேட்டு, அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கீழ்மொரப்பூர் பஞ்., தாமரைக்கோழியம்பட்டியில், 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராமத்தை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கு, 100 நாள் வேலை திட்டத்தில் பணி கேட்டு, நேற்று மதியம், 12:20 மணிக்கு அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் துணை பி.டி.ஓ., பூமாரிக்கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பெண்கள், 'நாங்கள் ஏற்கனவே, 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்தோம். அதற்கான பணம் எங்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. கடந்த, 2 ஆண்டுகளாக எங்களுக்கு பணி வழங்கவில்லை. ஆனால், எங்கள் கிராமத்தை சேர்ந்த, 20 பெண்களுக்கு மட்டும், பணி வழங்கப்பட்டுள்ளது. இதை கேட்டால் உங்களது ஆதார் கார்டு 'லாக்' செய்யப்பட்டுள்ளது. புதிதாக வங்கி கணக்கு துவங்க வேண்டும் என, பல காரணங்களை கூறுகின்றனர். ஏற்கனவே உள்ள வங்கி கணக்கில் மகளிர் உரிமை தொகை, பால் பணம் வரும்போது, 100 நாள் வேலை திட்ட பணிக்கான மட்டும் எப்படி பணம் வராமல் போகும். எத்தனை வங்கி கணக்குகளை நாங்கள் துவங்குவது' எனக்கேட்டு வாக்குவாதத்தில்
ஈடுபட்டனர்.அவர்களை சமாதானப்படுத்திய துணை பி.டி.ஓ., பூமாரிக்கண்ணன், 'அஞ்சல் அலுவலகத்தில் புதிதாக வங்கி கணக்கு துவங்குங்கள். அனைவருக்கும் பணி வழங்குகிறோம்' எனக்கூறினார். இதையடுத்து, முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள், 12:50 மணிக்கு கலைந்து சென்றனர்.