/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
11 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்
/
11 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்
11 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்
11 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்
ADDED : ஜன 25, 2025 01:51 AM
11 ஆயிரம் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்
பாப்பிரெட்டிப்பட்டி, : தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, கடத்துார் பகுதிகளில் அரசு மற்றும் தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும், 1, 5, 10 ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு ஆண்டுக்கு, இரண்டு முறை டிடி, டிப்தீரியா, தடுப்பூசி போடப்படு
கிறது. இந்த கல்வி ஆண்டில், இரண்டாம் கட்டமாக தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் தடுப்பூசி போடும் பணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கவுரிசங்கர் தலைமையில், வட்டார சமுதாய சுகாதார செவிலியர் நாகேஸ்வரி மற்றும் பகுதி சுகாதார செவிலியர் சிங்காரம்
உள்ளிட்ட, 15 செவிலியர்கள் இந்த தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில், 4,182 மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
இதேபோன்று, கடத்துார் வட்டாரத்தில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அரசு தலைமையில், சமுதாய சுகாதார செவிலியர் மலர்விழி உள்ளிட்ட, 30 செவிலியர்கள், 7,000 மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், மொத்தம், 11,182 மாணவ, மாணவியருக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.