sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

2 நாள் தொப்பூர் போக்குவரத்தில் மாற்றம் வாகனத்தை கவனமாக இயக்க அறிவுறுத்தல்

/

2 நாள் தொப்பூர் போக்குவரத்தில் மாற்றம் வாகனத்தை கவனமாக இயக்க அறிவுறுத்தல்

2 நாள் தொப்பூர் போக்குவரத்தில் மாற்றம் வாகனத்தை கவனமாக இயக்க அறிவுறுத்தல்

2 நாள் தொப்பூர் போக்குவரத்தில் மாற்றம் வாகனத்தை கவனமாக இயக்க அறிவுறுத்தல்


ADDED : செப் 02, 2024 02:34 AM

Google News

ADDED : செப் 02, 2024 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் மலைப்பகுதி சாலை, 8 கி.மீ., நீளம் கொண்டது. இங்கு அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதை தடுக்க, தேசிய நெடுஞ்சாலைத் துறை, பாளையம் சுங்கச்சாவடி, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தரப்பில் பல்வேறு நடவ-டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

வெள்ளக்கல் முதல் தொப்பூர் கணவாய், கட்டமேடு உள்ளிட்ட சாலை, வளைவான மற்றும் விபத்து பகுதிகளில் பராமரிப்பு பணிகள், பாளையம் சுங்கச்சாவடி நிறுவனம் மூலம் நடக்கிறது. இதில், 'ஸ்பீடு என்போர்ஸ்மென்ட்

சிஸ்டம்' மற்றும் வாகனங்-களில் வேகத்தை கணக்கிடும் கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடக்க உள்ளது. அதேபோல், சாலையின் இருபுறம் மற்றும் சென்டர் மீடியனில் பராமரிப்பு பணிகள் உள்ளிட்டவை, இன்று மற்றும் நாளை

என, 2 நாட்கள் காலை, 10:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்க உள்ளது. எனவே, குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து வாகனங்களும் வெள்ளக்கல் முதல் தொப்பூர் வரை ஒரு வழி பாதையாக மாற்றி போக்குவரத்திற்கு

அனுமதிக்கப்-படும்.

இது குறித்து, தொப்பூர் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி கூறு-கையில், ''சாலை பாதுகாப்பு பணி நடப்பதால், தேசிய நெடுஞ்-சாலை, என்.எச்., 44 வழியாக வரும் வாகனங்கள் வெள்ளக்கல் முதல் தொப்பூர் வரை மிதமான வேகத்தில்

பயணிக்க வேண்டும். ஒருவழிச் சாலையாக மாற்றும்போது, ஓட்டுனர்களின் அஜாக்கிர-தையால், விபத்து ஏற்படுகிறது. எனவே, 2 மற்றும் 3ம் தேதிகளில் (இன்று, நாளை), 2 நாட்கள் நடக்கும் சாலை பராமரிப்பு பணிக்கு, வாகன

ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வெளிமாவட்டங்களில் இருந்து வரும், கனரக வாகன ஓட்டு-னர்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மாற்று நெடுஞ்சாலை பாதைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us