/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மின்வாரிய குறைதீர் கூட்டம்21 மனுக்களுக்கு உடனடி தீர்வு
/
மின்வாரிய குறைதீர் கூட்டம்21 மனுக்களுக்கு உடனடி தீர்வு
மின்வாரிய குறைதீர் கூட்டம்21 மனுக்களுக்கு உடனடி தீர்வு
மின்வாரிய குறைதீர் கூட்டம்21 மனுக்களுக்கு உடனடி தீர்வு
ADDED : ஏப் 06, 2025 01:20 AM
மின்வாரிய குறைதீர் கூட்டம்21 மனுக்களுக்கு உடனடி தீர்வு
தர்மபுரி:மின் நுகர்வோர், பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில், தமிழகம் முழுக்க உள்ள அனைத்து செயற்பொறியாளர் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடத்த தமிழக மின்வாரியம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி நேற்று, தர்மபுரி மாவட்டத்திலுள்ள தர்மபுரி, பாலக்கோடு, அரூர், கடத்துார் ஆகிய, 4 கோட்டங்களிலும் செயல்படும் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில் காலை, 11:00 முதல் மாலை, 5:00 மணி வரை சிறப்பு முகாம் நடந்தது.
தர்மபுரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வளாகத்தில் நடந்த முகாமை மேற்பார்வை பொறியாளர் சுமதி தொடங்கி வைத்தார். இதில், மின் கட்டண தொகை, மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் உள்ளிட்ட கோரிக்கைகளுடன், 4 கோட்டங்களில், 441 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இதில், 21 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதர, 420 மனுக்கள் மீது, தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு குறைகள் விரைந்து நிவர்த்தி செய்யப்படும் என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.