/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாணவி கர்ப்பம்: 3 பேர் போக்சோவில் கைது
/
மாணவி கர்ப்பம்: 3 பேர் போக்சோவில் கைது
ADDED : ஏப் 06, 2025 01:22 AM
மாணவி கர்ப்பம்: 3 பேர் போக்சோவில் கைது
அரூர்:அரூர் அருகே, மாணவியை பாலியல் பலாத்காரம் செய், 3 வாலிபர்களை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொளகம்பட்டியை சேர்ந்தவர் வேலன், 27. இவர், அரசு பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவியிடம் பழகியுள்ளார். சில மாதங்களுக்கு முன், திருமண ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதே போல், பாப்பிசெட்டிப்பட்டியை சேர்ந்த ஜெய்சங்கர், 30, வேப்பம்பட்டி நித்திஷ்குமார், 21, ஆகியோரும் மாணவியிடம் பழகி, திருமண ஆசை வார்த்தை கூறி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் மாணவி கர்ப்பமானார். இது குறித்து கூறிய மாணவியை, அவரது தாய் அரூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளார். தகவலின் படி, தர்மபுரி குழந்தைகள் நல காப்பகத்தில் இருந்து மாணவியிடம் விசாரிக்கப்பட்டது. தொடர்ந்து மாணவி அளித்த புகார் படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து வேலன், ஜெய்சங்கர், நித்திஷ்குமார் ஆகிய, 3 பேரையும் கைது செய்தனர்.