/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மழையில் இடிந்த 4 வீடுகளின் சுவர்
/
மழையில் இடிந்த 4 வீடுகளின் சுவர்
ADDED : மே 20, 2025 02:41 AM
பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 2 நாட்களாக பரவலாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை தொடர்ந்து மழை பெய்தது. இதில் கடத்துார் அடுத்த தா.அய்யம்பட்டி காவேரிபுரத்தில் பழனியம்மாள், நதியா ஆகியோரின் ஓட்டு வீடுகளின் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து விழுந்தன. இதில் சுவர்கள் வெளிபக்கத்தில் இருந்ததால் வீட்டில் துாங்கி கொண்டிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
பி.பள்ளிப்பட்டியில் மகிமைநாதன் ஓட்டு வீடு ஒரு பக்க சுவர் இடிந்தது. அதிகாரப்பட்டி அடுத்த செங்காட்டு புதுாரில் இடி மின்னலுடன் மழை பெய்ததால், கோவிந்தராஜ் என்பவரின் வீட்டின் வெளியே கட்டியிருந்த பசுமாடு மீது மின்னல் தாக்கி பலியானது. காவேரிபுரத்தில் மழையால் வீடு இழந்த பழனியம்மாள், நதியா ஆகியோரின் வீடுகளை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, கடத்துார் பி.டி.ஓ., ரவிச்சந்திரன் பார்வையிட்டு, அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.