/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
விதி மீறிய வாகனங்களுக்கு ரூ.1.40 லட்சம் அபராதம்
/
விதி மீறிய வாகனங்களுக்கு ரூ.1.40 லட்சம் அபராதம்
ADDED : ஜூலை 14, 2024 02:52 AM
தர்மபுரி: தர்மபுரி நகர பகுதியில், போக்குவரத்து விதிமீறும் வாகனங்களை கட்டுப்படுத்தி, போக்குவரத்து நெரிசலை குறைக்க, போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
அதன்படி, தர்-மபுரி மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் அறிவுறுத்தலின் படி, போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் சின்னசாமி, கோமதி ஆகியோர், சோதனை மேற்கொண்டனர். இதில் சாலையில் விதி மீறிய வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். அதன்படி, மொபைல்போன் பேசியபடி வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், ஒரே பைக்கில், 3 பேர் பயணித்தல், ஒருவழிப்பாதையில் செல்லுதல் மற்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக, 183 வழக்குகள் பதிந்து, 1.40 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.