/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் சட்டசபை பேரவை மனுக்கள் குழு அறிவுறுத்தல்
/
கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் சட்டசபை பேரவை மனுக்கள் குழு அறிவுறுத்தல்
கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் சட்டசபை பேரவை மனுக்கள் குழு அறிவுறுத்தல்
கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் சட்டசபை பேரவை மனுக்கள் குழு அறிவுறுத்தல்
ADDED : ஆக 22, 2024 02:02 AM
தர்மபுரி, ஆக. 22-
தமிழக சட்டசபை பேரவை மனுக்கள் குழு தலைவரும், அரசு தலைமை கொறடாவுமான கோவி.செழியன் எம்.எல்.ஏ., தலைமையிலான, எம்.எல்.ஏ.,க்கள் அடங்கிய குழுவினர், தர்மபுரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம், அரசு மருத்துவ கல்லுாரி, கே.நடுஹள்ளி, பாப்பாரப்பட்டி, பென்னாகரம், அதகபாடி ஆகிய பகுதிகளில் மனுதாரர்கள் அனுப்பிய மனுக்களை ஆய்வு செய்து, நடந்து வரும் பணிகளை பார்வையிட்டனர். இதில், 36 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும், தர்மபுரி மாவட்ட, கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டட கட்டுமான பணிகள் மற்றும் தர்மபுரி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில், 20 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தபின், பணிகளை தரமாக விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க, பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் குறித்து விசாரிக்கும் வகையில், அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கோவி.செழியன் எம்.எல்.ஏ., தலைமையில் நடந்தது. மனுக்கள் குழு உறுப்பினர் மதியழகன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர் சாந்தி முன்னிலை வகித்தனர்.
இதில், 70 மனுக்கள் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டு துறை சார்ந்த அலுவலர்கள் மூலம், விளக்கம் அளிக்கப்பட்டது. முன்னதாக, பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தில், 7 இருளர் இன மக்களுக்கு, 5.70 லட்சம் ரூபாய் என, 35.49 லட்சம் ரூபாய் மதிப்பிலும், 6 பழங்குடியினருக்கு, 5.20 லட்சம் ரூபாய் என, 31.20 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டின் சாவிகள் வழங்கப்பட்டன. வருவாய்துறை சார்பில், 12 பயனாளிகளுக்கு, 5.76 லட்சம் ரூபாய் மதிப்பில் வீட்டுமனை பட்டா என, 72.45 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
எம்.எல்.ஏ.,க்கள் ஜோதி, சவுந்திரபாண்டியன், பாபு,
சின்னப்பா உட்பட அதிகாரி கள் கலந்து கொண்டனர்.